

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கே தடைகள் வருகிறதே என்று பலர் கூறலாம். அதனால் தான் என்னவோ, விநாயகருக்கு – vighna- raja (தடைகள் தருபவன்) மற்றும் vighna-hartha (தடைகளை நீக்குபவன்) என்று பெயர். Vighna-hartha அனைவருக்கும் தெரியும். ஆனால் vighna-raja என்று அழைக்கிறார்கள்?நமக்கு சிறு சிறு கஷ்டங்களைத் தந்து நமக்கு கர்ம வினைகளை போக்க உதவுகிறார்.
திருமூலர்
“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.” என்று கூறினால் அதற்கு சான்றே தேவை கிடையாது.
கணபதி என்று கூறினால் நமது வினைகள், கருமம், கவலை அனைத்தும் தீரும் என்று உறுதி தருகிறார்.
இன்னொரு வந்தனம் கூறுகிறது:
“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்”.
கணபதியைத் தொழுதால் பிறப்பு இறப்பு இல்லை என்ற உறுதி இந்தப் பாடல் மூலம் நமக்கு தெரிகிறது.
நாம் இறைவனிடம் வேண்டாத பொருள்இல்லை. ஆனால் ஓவ்வையார் ஒரு வினோதமான உன்னதமான வெண்டுதல் செய்கிறார்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா”.
பாலும். தேனும். பருப்பும், பாகும் தருகிறேன். சங்கத் தமிழ் மூன்றும் தர வேண்டும் என்கிறார்.
வேத வியாசர் ஸ்காந்த புராணத்தில் – விநாயகரின் 16 நாமத்தை – படிப்பை ஆரம்பிக்கும் போதும், புது வீட்டுக்குள் நுழையும் போதும், வெளியே கிளம்பும் போதும், யுத்தத்திலும், கஷ்டம் வந்த போதும், எவனொருவன் படிப்பானோ,அல்லது கேட்பானோ , அவனுக்கு இடையூர்கள் ஏற்படாது என்று கூறுகிறார்.
மங்களம் திசது மே வினாயகோ
மங்களம் திசது மே ஷடானன: ।
மங்களம் திசது மே மகேஸ்வரி
மங்களம் திசது மே மஹேஸ்வர:।।
ஓம்கார நிலையம் தேவம்
கஜ வக்த்ரம் சதுர்புஜம்।
பிசண்டிலமஹம் வந்தே ஸர்வ விக்னோப சாந்தயே।
ஸீமுகச்சைக தந்தச்ச கிலோ கஜ கர்ணக:
லம்போதரச்ச விகட: விக்னராஜோ வினாயக:
தூமகேதுர்கணாத்யஷ: பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
ஷோடசைதானி நாமானி ய: படேத் ச்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிரல்களை ததா