14/04/2024, திருப்பதி முகாம்
இன்று காலை ஒரு தாய், தன் மகளை அழைத்துக் கொண்டு , ஆச்சாரியார் அவர்களை தரிசனம் காண வந்திருந்தார்கள். அந்தத் தாய், தன் மகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆச்சாரியாள் அவர்கள், தன் கையில் இருந்த நெல்லிக் கனியைத் தந்து, “கனக தாரா ஸ்தோத்திரம் படிக்கவும்” என்று ஆசி அருளினார். அன்று நெல்லிக் கனியை வாங்கிக் கொண்டு , மஹா லக்ஷிமியின் அருள் வேண்டி ,கனக தாரா ஸ்தோத்திரம் பாடி. வறுமையை போக்க வேண்டும் என்று மஹா லட்சுமியை வேண்டிக் கொண்டார்.
இன்றோ ஆச்சாரியார் அவர்கள் ஆதி சங்கரர் பெற்றுக் கொண்ட நெல்லிக் கனியைத் தந்து, அவர் அருளிய கனக தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய ஆணையிட்டது அனைவருக்கும் பொருந்தும். இதையே திருவள்ளுவர் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” என்று கூறுகிறார்.
ஒரு நெல்லிக் கனியை பெற்றுக் கொண்டு,உலகம் உய்ய வழி காட்டினார் ஆதி சங்கரர். லௌகீக வாழ்க்கையில் இருக்கும் நமக்கு நெல்லிக்கனியும் தேவை, கனகதாரா வும் தேவை என்ற உண்மையை உணர்த்தியவர். நெல்லிக் கனி பொருளாதாரத்தை குறிக்கிறது, கனகதாரா ஆன்மீகத்தை காட்டுகிறது என்றால் மிகையாகாது. முருகன் கிடைக்காத மாம்பழம் தேடி, பழனி மலையில் தவம் இருந்தான். மாம்பழம் ஞானத்தை குறிக்கும். சபரி தின்ற பழம் பக்தியைக் குறிக்கும்.
This morning a mother and her daughter came to see His Holiness .The mother prayed to bless her daughter. Immediately the Acharya gave the gooseberry fruit in and blessed her saying, “Recite Kanakadhara stotram”. After getting gooseberry fruit during biksha from a woman, who had nothing to offer, Adi Sankara sought the blessings and grace of Maha Lakshmi and chanted kanakadhara stotram. He prayed to MahaLakshmi to remove poverty.
Today the Acharya gave a gooseberry fruit that Adi Shankar had received and advised to recite the Kanakadhara stotram which is applicable to everyone. Adi Sankara showed the way to the world by getting a gooseberry fruit. He is the one who made us realize the fact that we who are in worldly life need Nellikani and Kanakadhara too. It is no exaggeration to say that Nellik Kani represents economy and Kanakadhara shows spirituality.
Lord Muruga did penance in Palani Hill in search of mangoes which he could not get in a dual battle with His brother Vinayaka.. Mango represents wisdom. The fruit eaten by Sabari represents devotion. We need Nellikkani, Mango and the fruits offered by Sabari to Rama. We need Knowledge, Devotion and prosperity.