வேதோ நித்யம் அதீயதாம் – Study Vedas Daily

13/03/2024
திருப்பதி

காலையில் தண்டலம் வேத பாடசாலையிலிருந்து வேத வித்யார்த்திகள் வந்திருந்தார்கள். அவர்கள் வேத மந்திரங்கள் ஆச்சாரியார்கள்.முன்பு பாராயணம் செய்தார்கள். அவர்களை ஆசிர்வாதம் செய்து, “நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து, பாராயணம் செய்ய வேண்டும்” என்ற போது, என் கண் முன் ஆதிசங்கரரே “வேதோ நித்யம் அதீயதாம்” என்று கூறுவது போல் தெரிந்தது.
அந்த வரிகளில் தாயின் கருணை, ஆதி சங்கரரின் ஆதங்கம் தெரிய வந்தது. வேதோ நித்யம் அதீயதாம் என்று சொன்ன ஆதி சங்கரர், அடுத்ததாக “தத் உதிதம் கர்மஸுஅநுஷ்டீயதாம்” என்று கூறியுள்ளார். அதாவது, ,” தினமும் வேதம் ஒதுங்கள் ; அதில் சொல்லியிருக்கிற யக்ஞாதி அநுஷ்டானங்களை நன்றாகப் பண்ணுங்கள்” என்று பொருள்.


அனுஷ்டானம் செய்யும் போது தான், அது எவ்வளவு கடினம் என்று அறிய முடிகிறது. பூஜை அறையில் அமர்ந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்ய அமர்ந்த போது, ஃபேன் சுற்றவில்லை, வெய்யில் கடுமையாக உள்ளது என்று மனம் வசதியை நாடிச் சென்றது. உடனே மனம் கூறியது – “சிவராத்திரி அன்று ஆச்சாரியாள் மாலை 6 முதல், அடுத்த நாள் காலை 6 மணி வரை ஃபேன் இல்லாமல் பூஜை செய்தது நினைவில் இல்லையா?” என்று. அனுஷ்டானம் என்பது ஆன்மீக வாழ்வில் ஒரு சோதனை அறை – Testing Laboratory.

In the morning, Vedic students had come from Thandalam Vedic School. They chanted the mantras and recited them before His Holiness.
His Holiness blessed them by saying, “You should all read and recite well.” When His Holiness said that I was reminded of Adi Sankara, who said in Sadhana Panchakam, “Vedo Nityam Adityatam”. I for a moment thought Adi Sankara himself was standing in front of Vidyarthis and telling them to study Vedas daily. It seemed to say that.


Mother’s kindness and Adi Shankar’s concern came to light in those lines. Adi Sankara who said that Vedo Nityam Athiyadham, next said “Dat Uditham Karmasuanushteiyadham”. That is, “Study the Vedas daily; Perform the yagnati rituals mentioned in it” means.


It is only when you practice that you realize how difficult it is. When I sat in the hall to do Sandhya Vandana, I was not able to sit due to heat.I looked up and wanted to get up and switch on the fan. Immediately the mind said – “Don’t you remember that Acharya performed puja from 6 pm on Shivratri and till 6 am the next morning without a fan?”. Thus Anushtana is a testing laboratory in spiritual life.

Scroll to Top