Author name: SA Srinivasa Sarma

பத்ததி வகுப்புகள் Paddhati Classes at Tirupathi Mutt

Tirupati camp, 17/03/2024

This afternoon, for the first time in Tirupati Mutt, pathati classes were held for children. The children, even it was in their own sweet tone and tunes with flowers dancing to the tunes of breeze like movements. there was a beauty in it. With both hands held as if saluting, eyes closed and words coming out, devotion was seen on the face and shraddha or faith in the eyes. It is said that “Ishvara vishayakam satharam prema”. It means – reverential love towards Ishvara. You could see it in the children’s faces. Blameless Mind – Anasuya: – It is one of the four important qualities. Gita can be taught to those who have it:
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन.
न चाशुशुश्वे वाच्यं न च मा योऽभ्यसुयति ॥

It was seen that the children had easily acquired the merit of piety. Each of the children came before the Acharya and received prasad by saying their name. Asking the first child to hold out both hands and take the prasadam, he gave him an apple. I saw His Holiness telling the second child lovingly to bow down to the padukas and receive the prasad, and seeing the other children following immediately the Acharya’s instructions. I could feel that the words Shankara and Guru were imprinted in their minds and hearts.

இன்று நற்பகல் முதன் முறையாக திருப்பதி மடத்தில் பத்ததி வகுப்புகள் குழந்தைகளுக்கு நடைபெற்றது. அவர்களின் மழலை மொழியில், வார்த்தைகள் மாறியதாக தென்பட்டாலும், அதில் ஒரு அழகு இருந்தது. கைகள் இரண்டையும் வணக்கம் சொல்வது போல் வைத்துக் கொண்டு,கண்களை மூடிக் கொண்டு வார்த்தைகள் வெளியே வரும் போது, முகத்தில் பக்தியும் , கண்களில் ஸ்ரத்தையும் காணப்பட்டது. “ஈஸ்வர விஷயகம் ஸாதரம் ப்ரேம” என்று கூறப்படுகிறது. அதன் பொருள் – ஈஸ்வரனை நோக்கி மரியாதையுடன் கூடிய அன்பு – என்று பொருள். அதை குழந்தைகளின் முகத்தில் காண முடிந்தது. குற்றமறியாத மனம் – அனசூய: – அது நான்கு முக்கியமான குணத்தில் ஒன்று. அது உள்ளவர்களுக்கு கீதை கற்றுத் தரலாம்:

इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥
இத3ம் தே1 நாத1ப1ஸ்கா1ய நாப4க்1தா1ய க1தா3சன
ந சா1ஶுஶ்ரூஷவே வாச்1யம் ந ச1 மாம் யோ‌ப்4யஸூயதி1

குழந்தைகள் பக்தி என்ற ஒரு தகுதியை எளிதாக பெற்று விட்டதை காண முடிந்தது. ஒவ்வொரு குழந்தைகளும் ஆச்சாரியாள் முன் வந்து தங்கள் பெயரைக் கூறி பிரசாதம் பெற்றுக் கொண்டார்கள். முதல் குழந்தையிடம் இரண்டு கைகளை நீட்டி பிரசாதம் வாங்கிக் கொள்ள கூறி, ஆப்பிள் தந்தார். இரண்டாவது குழந்தையிடம் பாதுகையை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொள்ள அன்புடன் கூற, பின்வந்த மற்றக் குழந்தைகள், உடனே ஆச்சாரியாள் கூறியதை பின்பற்றிக் கொண்டதைப் பார்க்கும் போது – பசு மரத்தில் அடித்த ஆணி போல் – என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. சங்கர, குரு என்ற வார்த்தைகள் அவர்களின் மனதில் பதிந்து விட்டதை உணர முடிந்தது.

பத்ததி வகுப்புகள் Paddhati Classes at Tirupathi Mutt Read More »

கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கவும் – Recite Kanakadhara Stotram

14/04/2024, திருப்பதி முகாம்

இன்று காலை ஒரு தாய், தன் மகளை அழைத்துக் கொண்டு , ஆச்சாரியார் அவர்களை தரிசனம் காண வந்திருந்தார்கள். அந்தத் தாய், தன் மகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆச்சாரியாள் அவர்கள், தன் கையில் இருந்த நெல்லிக் கனியைத் தந்து, “கனக தாரா ஸ்தோத்திரம் படிக்கவும்” என்று ஆசி அருளினார். அன்று நெல்லிக் கனியை வாங்கிக் கொண்டு , மஹா லக்ஷிமியின் அருள் வேண்டி ,கனக தாரா ஸ்தோத்திரம் பாடி. வறுமையை போக்க வேண்டும் என்று மஹா லட்சுமியை வேண்டிக் கொண்டார்.

இன்றோ ஆச்சாரியார் அவர்கள் ஆதி சங்கரர் பெற்றுக் கொண்ட நெல்லிக் கனியைத் தந்து, அவர் அருளிய கனக தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய ஆணையிட்டது அனைவருக்கும் பொருந்தும். இதையே திருவள்ளுவர் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” என்று கூறுகிறார்.

ஒரு நெல்லிக் கனியை பெற்றுக் கொண்டு,உலகம் உய்ய வழி காட்டினார் ஆதி சங்கரர். லௌகீக வாழ்க்கையில் இருக்கும் நமக்கு நெல்லிக்கனியும் தேவை, கனகதாரா வும் தேவை என்ற உண்மையை உணர்த்தியவர். நெல்லிக் கனி பொருளாதாரத்தை குறிக்கிறது, கனகதாரா ஆன்மீகத்தை காட்டுகிறது என்றால் மிகையாகாது. முருகன் கிடைக்காத மாம்பழம் தேடி, பழனி மலையில் தவம் இருந்தான். மாம்பழம் ஞானத்தை குறிக்கும். சபரி தின்ற பழம் பக்தியைக் குறிக்கும்.

This morning a mother and her daughter came to see His Holiness .The mother prayed to bless her daughter. Immediately the Acharya gave the gooseberry fruit in and blessed her saying, “Recite Kanakadhara stotram”. After getting gooseberry fruit during biksha from a woman, who had nothing to offer, Adi Sankara sought the blessings and grace of Maha Lakshmi and chanted kanakadhara stotram. He prayed to MahaLakshmi to remove poverty.

Today the Acharya gave a gooseberry fruit that Adi Shankar had received and advised to recite the Kanakadhara stotram which is applicable to everyone. Adi Sankara showed the way to the world by getting a gooseberry fruit. He is the one who made us realize the fact that we who are in worldly life need Nellikani and Kanakadhara too. It is no exaggeration to say that Nellik Kani represents economy and Kanakadhara shows spirituality.

Lord Muruga did penance in Palani Hill in search of mangoes which he could not get in a dual battle with His brother Vinayaka.. Mango represents wisdom. The fruit eaten by Sabari represents devotion. We need Nellikkani, Mango and the fruits offered by Sabari to Rama. We need Knowledge, Devotion and prosperity.

கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கவும் – Recite Kanakadhara Stotram Read More »

Scroll to Top