SRI Kamakshi Kameswara Kalyana Utsvam

SRI Kamakshi Kameswara Kalyana Utsvam Read More »
ஸ்கந்த கிரி முகாம், 22/01/2024
ராமர் பிறந்த இடத்தில் பிராணப்பிரதிஸ்டை நடந்து கொண்டு இருக்கும் சமயம், ஸ்கந்தகிரி முகாமில் இராம நாமம் எதிரொலித்தது. முகாமில் ஆச்சாரியார் அவர்கள் முன்னிலையில் இராமரின் பூஜை நடைபெற்றது. ஆசாரியர்கள் பேசியதாவது
தர்மத்திற்கு பிரதிஷ்டை. எதற்கு அவதாரம்? இங்கு எதற்கு வர வேண்டும்? என்ன அவசரம் இங்கு வர வேண்டும்? தேவர்களின் கோரிக்கை கேட்டு வர வேண்டும் ? துக்கத்தை விரட்ட அவதாரம் என்று கூற வேண்டும். உலக நலனுக்கு பூலோகம் வர வேண்டும். மனிதனாக இருந்து, வன வாசம் சென்று, நமது கலாச்சாரத்தை காப்பாற்றினார்.
புண்ணியம், பாபம் நமது கலாச்சாரத்தில் உண்டு. தர்ம பிரச்சாரம் இந்த நாட்டில் உண்டு – பொட்டு வைத்துக் கொள்ளவும், உண்மை பேசவும், தர்மத்தை காப்பாற்ற வேண்டும். முதல் அவதாரம் வேதத்தை காப்பாற்ற மச்ச அவதாரம். வேத ரக்ஷனம், உலக இரக்ஷனம்.வேதத்தின் ஸ்வரூபம் இராமன். விக்கிரஹான் ராம: மந்திரம் மூலம், சைதன்யம்.
இலங்கை தங்க மயமாக இருந்தாலும், தன் தாய் நாட்டை விட சிறந்த இடம் வேறு ஒன்றும் இல்லை என்றான் இராமன். மாத்ரு பக்தி, மாத்ரு பூமி பக்தியை கற்றுத் தந்தார் இராமன்.
இந்து அனைவரையும் ஸ்னேகமுடன் பார்க்க கூறுகிறது நமது தர்மம். நமது ஜன்ம பூமியை நாம் காப்பாற்ற வேண்டும். பல இடங்களில் கோவில்கள் இருந்தாலும், பிறந்திடம் முக்கியம். நமது கோவில்கள் அனைத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். தர்மம் நமக்கு முக்கியம். இது நமது. தேசத்தின் தர்மம் நமது. அதை நாம் காப்பாற்ற வேண்டும்.
ராம பூமி வந்தது என்பது நல்ல செய்தி – சாஸ்திரம், சட்டம் சேர்ந்து வந்தது.
நமது தேசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தர்மம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தர்மம் வாழ்க்கைக்கு முக்கியம். முக்தி. பக்தி முக்கியம். அபிப்பிராயம் நன்றாக இருக்க வேண்டும். நமது தர்மம்,நமது சம்பிரதாயம். தர்மம் முக்கியம் அனைவருக்கும். அது வழி காட்டி. உத்தர சக்தி, தட்சிண புத்தி சேர்ந்து செயல் பட வேண்டும்.
நாம் சமஸ்கிருதம், சங்கீதம். வேதம், வேத பாட சாலை அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். இந்த தேசம் வளர வேண்டும். தேச பக்தி வளர வேண்டும். சதுர வேத மங்கலம் போன்ற கிராமங்கள். வேதம் காப்பாற்ற ஏற்பட்டது. தர்மம், பிராணவாயு போன்று முக்கியமானது. தர்மத்திற்கு உதாரணம், நல்லதே நடக்கும் என்பதற்கு உதாரணம் அயோத்தியா. ஆதாரங்களை நாம் காப்பாற்ற வேண்டும். கற்களை நாம் காப்பாற்ற வேண்டும். கல்வெட்டுக்களை நாம் காப்பாற்ற வேண்டும். திவ்ய தேசங்களை நாம் காப்பாற்ற வேண்டும்.
புண்ய ஆத்மா. புண்ணிய அதிகாரி. புண்ணிய தலைவர்கள் நமக்கு தேவை. தயார் செய்ய வேண்டும்.
சாஸ்திரம் நமக்கு முக்கியம் என்று கீதை கூறுகிறது. ஆந்திர பூமி நல்ல பூமி, புண்ணிய பூமி. நமது பூமி நம்மிடம் இருக்க வேண்டும். கிராமம் முழுவதும் தர்மம் தழைக்க நாம் சேர்ந்து பணி செய்ய வேண்டும். நமக்கு நல்ல சங்கல்பம் தேவை. Business and charity, technology and tradition சேர்ந்து இயங்க வேண்டும். கோவில்கள் connecting centre ஆக இருக்க வேண்டும்.
சில விஷயங்கள் நாம் உடனே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் , இந்த தர்மத்தில் நாம் பிறந்தோம். நாம் சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும்.வீட்டில் தர்மம் வளர வேண்டும். ஆஞ்சநேயரின் அனுக்ரகம் தேவை. ஆஞ்சநேயர் மூலம் நாம் அனைத்தும் செய்ய வேண்டும்.ராம ராஜ்யம் அனைவருக்கும் நல்லது. குல தெய்வம்,குல குரு முக்கியம். அனைவரும் குரு பக்தியுடன் வாழ வேண்டும்.
ராம பிராணப்பிரதிஷ்டை பூஜை Read More »